Saturday, May 07, 2005

ஓ கிட்ஸ்!

Oh kids! Posted by Hello

பூத்தொடுத்தல்

இந்தப் பூவைத் தொடுப்பது எப்படி?
சாந்தமானதொரு பிரபஞ்சத்தைச்
சுமக்கின்றன ஒல்லித் தண்டுகள்.
இறுக்கி முடிச்சிட்டால்
காம்புகளின் கழுத்து முறியும்.
தளரப் பிணைத்தால்
மலர்கள் தரையில் நழுவும்.
வாசலில் மரணம் நிற்பதறிந்தும்
வருந்தாமல் சிரிக்கும்
இந்தப் பூவை
எப்படித் தொடுக்க நான் -
ஒரு வேளை,
என் மனமே நூலாகும்
நுண்மையுற்றாலொழிய

-(உமா மகேஸ்வரி
("வெறும் பொழுது" தொகுதியிலிருந்து)

0 Comments:

Post a Comment

<< Home

Statcounter